Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமழிசை காய்கறி மார்க்கெட் க்ளோஸ்: எப்போ தெரியுமா?

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (11:32 IST)
ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு. 
 
கொரோனா ஊரடங்கின் போதும் இயங்கிய கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். 
 
இதனை அடுத்து சமீபத்தில் யம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டன. அங்கு காய்கறி சந்தை அமைக்கப்பட்டதில் இருந்து காய்கறி வியாபாரம் மந்தமாகவே இருந்தது. 
 
இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 
 
குறிப்பாக நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 21, 28 ஆம் தேதி அதாவது அடுத்த இரண்டு ஞாயிற்றுகிழமைகளில் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments