Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை?: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து!

ரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை?: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து!

ரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை?: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து!
, வியாழன், 18 மே 2017 (15:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மண்டையில் எதுவுமே இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இவரது இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அதிரடியாகவும், சர்ச்சையாகவும் கருத்துக்களை கூறுவதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வல்லவர். தனது மனதில் பட்டதை பட்டென்று தனது முகநூல், டுவிட்டர்களில் வெளிப்படுத்துவார் அவர். இந்நிலையில் அவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், எனக்கு தென்னிந்தியர்கள் மீது நல்ல உயர்ந்த கருத்து உள்ளது. ஆனால் அவர்கள் சினிமா நட்சத்திரங்களை தெய்வமாக பாவித்து அவர்களை வழிபடுவது ஏன் எனபது தான் புரியவில்லை.
 
1967-68 காலகட்டத்தில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தமிழ் நண்பர் ஒருவருடன் சிவாஜி கணேஷன் நடித்த படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன். அந்த படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேஷனின் காலை தான் காட்டினார்கள். அதற்கு மக்கள் வெறித்தனமாக ஆரவாரம் செய்தார்கள்.
 
அதே போல தற்போது பல தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது?. மக்களின் வறுமைய போக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார பராமரிப்பு, விவசாயிகள் துன்பம் போன்றவை தீர்க்கவும் ஏதாவது தீர்வு ரஜினிகாந்திடம் இருக்கிறதா?.
 
நான் நினைக்கிறேன் அவரிடம் எதுவுமே இல்லை. அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். அமிதாப்பச்சன் போல ரஜினிகாந்த் மண்டையிலும் எதுவும் இல்லை என மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திர அரசை கலைக்க வேண்டும்: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு தாவிய கட்ஜு!!