பல மாதங்களாக மூடப்பட்ட மெரினா திறப்பு! – புத்தாண்டுக்கு ரெடியாகும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (14:04 IST)
கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மெரினா கடற்கரை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல கடற்கரைகள் மூடப்பட்டன. இதனால் கடற்கரை செல்லும் பாதைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. தற்பொது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

கடற்கரையில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கடற்கரை திறக்கப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கடற்கரையில் கொண்டாட மக்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments