Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரன் காமெடி பண்ணுகிறார்… அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (09:02 IST)
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுக மற்றும் பாஜக ஆகியக் கட்சிகளோடு கூட்டணி அமைப்பதில் பிரச்சனை இல்லை எனத் தெரிவித்திருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தினகரன் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

விழா ஒன்றில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வுக்கு தலைமையேற்ற அவர் செய்தியாளர்களிடம் ‘பரபரப்பான அரசியல் சூழலில் யாராவது காமெடி பண்ணவேண்டுமே. அதைதான் டிடிவி தினகரன் செய்துகொண்டிருக்கிறார். அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments