Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சியில் அதிமுக இலவச ஸ்கூல் பேக் சப்ளை! – பறிமுதல் தேர்தல் பறக்கும்படை!

Advertiesment
திருச்சியில் அதிமுக இலவச ஸ்கூல் பேக் சப்ளை! – பறிமுதல் தேர்தல் பறக்கும்படை!
, செவ்வாய், 2 மார்ச் 2021 (15:00 IST)
தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் ரகசியமாக விநியோகிக்கப்பட்ட அரசு ஸ்கூல் பேக்குகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி அருகே உள்ள உறையூரில் நகராட்சி பள்ளியில் வைத்து பள்ளி குழந்தைகளுக்கான அரசின் இலவச புத்தகப்பைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தவகையில் அங்கு சோதனை செய்த பறக்கும் படையினர் மூட்டை மூட்டையாய் இருந்த புத்தகப்பைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்டா வர சொல்லுங்க.. காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்! - நிர்வாகிகள் அதிர்ச்சி