கொரோனா பீதி: தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:30 IST)
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் நேற்று நடந்த பொது தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்று வந்த இந்த பொதுத்தேர்வில் நேற்று 34,000 மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை முதல் ஊரடங்கு அறிவிக்க இருந்ததாலும், கொரோனா பீதியினாலும் நீண்ட தொலைவுகளிலிருந்து வந்து தேர்வெழுதும் மாணவர்கள் பலர் தேர்வுகளுக்கு வரவில்லை என தெரிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 மாணவர்கள் தேர்வு எழுத வராதது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments