Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் மார்க் ஷீட் இல்ல, லிஸ்ட் வெச்சுதான் பாஸ் போடணும்! – திடுக்கிடும் தகவல்!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (09:06 IST)
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் முந்தைய தேர்வு விடைத்தாள்கள் பல தனியார் பள்ளிகளிடம் இல்லை என தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். தேர்ச்சி மதிப்பெண்களை முந்தைய காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேடு வைத்து கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வருகைப்பதிவு மற்றும் மாணவர்களின் முந்தைய தேர்வு விடைத்தாள்களை சமர்பிக்க தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் விடைத்தாள்களை வைத்தில்லை என்று தெரிய வந்துள்ளது, பல பள்ளிகள் மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு விடைத்தாள்களை பெற்றோரிடம் கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது, ஆனால் பல பெற்றோர்கள் விடைத்தாள்களை பத்திரப்படுத்தி வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் நந்தகுமார் தேர்வுத்துறை இயக்குனருக்கு விளக்கம் அளித்துள்ளதுடன், விடைத்தாள்கள் கட்டாயம் வேண்டும் என வற்புறுத்தினால் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறி, பள்ளிகளில் பதிவேட்டில் உள்ள மதிப்பெண்கள் அடிப்படையிம் மதிப்பெண்கள் வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments