Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
, திங்கள், 5 டிசம்பர் 2016 (20:25 IST)
முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தவறான தகவலை பரப்பிய ரங்கராஜ் பாண்டேவை கண்டித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.


 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து, கடந்த 19ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

webdunia

 

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 4 மணி வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், அதிகாலை 4 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்தனர்.

webdunia

 
மேலும், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்து அளிக்கக்கூடிய சிகிச்சை குறித்து கலந்து ஆலோசித்தனர்.

webdunia
webdunia

 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக தந்தி டிவியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே செய்தி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை தந்தி தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது.

webdunia

 

இதனை தொடர்ந்து அந்த செய்தி காட்டு தீ போல பரவ தமிழகத்தில் பதற்றம் தொற்றி கொண்டது. இதனையடுத்து, தவறான தகவலை பரப்பிய ரங்கராஜ் பாண்டேவை கண்டித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

 
webdunia


webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. நிலைமை: செய்தியாளர்களை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்!