Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வாயத் தொறந்தா எல்லோரும் சூசைட் பண்ணிப்பாங்க – நாம் தமிழர் கூட்டத்தில் மன்சூர் அலிகான் !

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:58 IST)
நாம் தமிழர் கட்சி சார்பில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வண்ணாரப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான் அதிரடியாக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக வண்னாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் நடத்திய போராட்டத்தின் அவர்களைக் கலைக்க போலிசார் தடியடி தாக்குதல் நடத்தியது பரபரப்பை உண்டாக்கியது. போலீஸாரின் அராஜகத்தைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நாம் தமிழர் கட்சியும் வண்ணாரப்பேட்டையில் கூட்டத்தை நடத்தியது.

அந்த கூட்டத்தில் அக்கட்சியின் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘மன்சூரலிகான் வாயை திறந்தாலே, எப்ஐஆர் போட்டுட்டு 10 பேர் வெளியே ரெடியா நிப்பாங்க. ஆனா அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது. மக்கள் போராட்டத்துல நான் உள்ள புகுந்து எதும் பிரச்சனை ஆகிடக்கூடாதுன்னு பாக்குறேன். இல்லாட்டி நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க, அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான். அங்க இருக்கவங்களுக்கு ஏபிசிடி யே தெரியாது. ஆனா என் ஆர் சி, சி ஏ ஏ-னு இன்னும் நாலு வருஷத்துக்கு இதையேதான் பண்ணிட்டு இருப்பாங்க. அதனால இவங்களை ஒட்டுமொத்தமா துடைச்செறியறதுதான் என்னுடைய வேண்டுகோள். பத்திரிக்கையாளர்கள் ஏதாவது கட்டுரை எழுதி அவர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி எறியணும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments