பொண்டாட்டியை மறைச்சு வச்சிட்டு பதவிக்கு வந்தவர் மோடி என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.
கடந்த ஞாயிறு அன்று தி நகரில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, பொண்டாட்டியை மறைச்சு வச்சிட்டு ஆட்சிக்கு வந்தவர் மோடி, இதே நான் பொண்டாட்டி இல்லை என்று வேட்பு மனுவில் கூறியிருந்தால் விட்டு விடுவார்களா? அப்படியே தேர்தலில் ஜெயித்தாலும் வெற்றி செல்லாது எனக்கூறி சிறையில் அடைத்துவிட மாட்டார்களா? தற்போது அப்படிபட்டவரை வெற்றி பெற வைத்து பொதுமக்கள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்று கூறினார்.