Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்.? மீண்டும் தாய் கழகத்தில் இணைய கோரி கடிதம்..!

Manzoor Alikhan

Senthil Velan

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (14:23 IST)
ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் அளித்துள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார்.  
 
இந்நிலையில் சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் என்றும் மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
 
தனது இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர் என மன்சூர் அலிகான் கூறினார்.


ஆனால், தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது எனவும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு..! விரைவில் குற்றப்பத்திரிகை... ! காவல்துறை தகவல்.!!