Publish Date: Fri, 09 Dec 2022 (21:52 IST)
Updated Date: Fri, 09 Dec 2022 (21:53 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி புயலின் வெளிப்புறப் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் காற்று வேகமாக வீச தொடங்கியுள்ளதாகவும், கடந்த மூன்று மணி நேரமாக இடைவிடாமல் சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் காற்றின் வேகம் தற்போது பலமாக வீச தொடங்கியதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மாமல்லபுரத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது புயல் இருப்பதாகவும் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது