Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்கு வரவேண்டும்: செல்போன் டவரில் ஏறி டிரைவர் போராட்டம்

Advertiesment
அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்கு வரவேண்டும்:  செல்போன் டவரில் ஏறி டிரைவர் போராட்டம்
, திங்கள், 13 பிப்ரவரி 2017 (13:09 IST)
கரூரில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வர சொல்லி, லாரி டிரைவர் மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.




கரூர் அருகே தான்தோன்றிமலை பாரதிதாசன் நகர் முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்த வடமலை என்பவரது மகன் அன்பழகன், 45. லாரி டிரைவரான இவர் நேற்று இரவு, 7:15 மணிக்கு வீட்டுக்கு அருகில் இருந்த மொபைல் போன் டவரில் ஏறி,  தமிழக முதல்வர் ஓபிஎஸ் தான் முதல்வராக தொடரவேண்டும் என்றும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நகர அ.தி.மு.க., செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் வர வேண்டும், இல்லையேல் கடந்த சட்டசபை தேர்தலில் போட்ட ஓட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தகவல் அறிந்த கரூர் டவுன் டி.எஸ்.பி., கும்மராஜா, பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு, அமைச்சருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர் உன் மொபைல் போனில் பேச முயற்சி செய்கிறார், போனை ஆன் செய்து பேசு, என மைக் மூலம் போலீசார் அன்பழகனுக்கு தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்தால் தான் இறங்குவேன் என, அன்பழகன் மொபைல் போன் டவரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், தான்தோன்றிமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க எந்த பத்திரிக்கை?: விஜயகாந்த் பாணியில் செய்தியாளரை மிரட்டிய சசிகலா!