வேலையில்லாமல் வறுமை.. இளைஞர் போட்ட திட்டத்தால் 3 வேளை தற்போது சாப்பாடு..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (11:58 IST)
வேலையில்லாமல் வறுமையில் வாடிய இளைஞர் ஒருவர் போட்ட திட்டத்தின் காரணமாக அவருக்கு மூன்று வேளை தற்போது சாப்பாடு கிடைக்கிறது என்பதும் ஆனால் அந்த சாப்பாடு சிறையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஈரோடு பகுதியைச் சேர்ந்த 34 வயது சந்தோஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அவர் வறுமையில் வாடிய நிலையில் மூன்று வேலை சாப்பாடு கூட கிடைக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சிறைக்கு சென்றால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்று ஒரு சிலட் கூறியதை அடுத்து அவர் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது வேலையில்லாமல் வறுமையில் வாடுவதாகவும் இதனால் சிறைக்கு சென்றால் மூன்று வேளை உணவு கிடைக்கும் என்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல அவர் மூன்று முறை செய்திருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அவரை சிறையில் அடைத்து தண்டனை கொடுப்பதை விட அவருக்கு ஒரு நல்ல வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments