Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சாகும் வரை சிறை என தீர்ப்பு!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சாகும் வரை சிறை என தீர்ப்பு!
, புதன், 23 பிப்ரவரி 2022 (13:02 IST)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை இயற்கையாக அவர் சாகும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராமநாத மாவட்டம் கீழக்கரையில் 4 வயது சிறுமி ஒருவருக்கு ராஜா முகமது என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த தீர்ப்பில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜாமுகமது என்ற நபருக்கு இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூபாய் 1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் ஓட்டு போட எதிர்ப்பு! ராணுவ பாதுகாப்புடன் வந்த அமைச்சர் – உ.பியில் பரபரப்பு!