Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்காதல் விவகாரம் : வடபழனியில் வங்கி ஊழியர் படுகொலை

கள்ளக்காதல் விவகாரம் : வடபழனியில் வங்கி ஊழியர் படுகொலை
, வியாழன், 9 ஜூன் 2016 (15:58 IST)
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வங்கி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை வடபழனி குமரன் காலனி ராஜாங்க மத்திய தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் (47). அவரின் மனைவி கவுசல்யா (35). அவர்களுகு அபிஷேக் (20), ரோகித் (16) என்ற இரண்டு மகன்களும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
 
இதில், விஜயகுமாரின் நண்பர் ராஜேஷ் என்பவரோடு கவுசல்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி இரண்டு மாதஙக்ளுக்கு முன்பு கவுசல்யா ராஜேஷோடு சென்று விட்டார்.
 
இந்நிலையில், நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவிற்கு விஜயகுமார் சென்ற போது, அங்கு வந்த ராஜேஷின் நண்பர் நாகராஜ், விஜயாகுமரிடம் அவரது மனைவி ராஜேஷோடு ஓடிப்போனதை பற்றி கிண்டலடித்தாக தெரிகிறது. அதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 
 
அதன்பின் வீட்டிற்கு சென்றா விஜயகுமார், இதுபற்றி தங்கள் இரு மகன்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன்கள் அபிஷேக், ரோகித் மற்றும் விஜயகுமார் நாகராஜன் வீட்டிற்கு சென்றனர். தந்தையை அவமானமாக பேசிய நாகராஜிடம் தகராறு செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
 
இதுபற்றி கேள்விபட்டு ராஜேஷும், அவரது சகோதரை நாகேஸ்வரராஜும் அங்கு வந்து நாகராஜனுக்கு ஆதரவாக மோதலில் ஈடுபட்டனர். அரிவாளால் அபிஷேக், ரோகித்தை தாக்கினார்கள். இதில் இருவருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ரோகித் நாகேஸ்வரராஜின் தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற வடபழனி போலீசார் நாகேஸ்வரராஜின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நாகேஸ்வரராஜ் பெங்களூரில் சட்டபடிப்பு (எல்.எல்.பி.) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சென்னையில் ஒரு தனியார் வங்கியின் ஏஜெண்டாகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, விஜயகுமார், அவரது மகன்கள் அபிஷேக், ரோகித் உறவினர் மாரி (35), கள்ளக்காதலன் ராஜேஷ், நாகராஜன் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். இதில் ரோகித் மைனராக இருப்பதால் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனையில், ராஜேஷின் சகோதரர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 வயது சிறுமிக்கு 50 வயது முதியவருடன் திருமணம்: தடுத்து நிறுத்திய காவல் துறை