Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் நடத்தை சரியில்லை - ஜோதிடர் சொன்ன வார்த்தையால் பலியான இரு உயிர்கள் !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (08:35 IST)
தென்காசியில் ஜோதிடரின் வார்த்தயை நம்பி தனது மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாரியப்பன் எனும் நபர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டிணத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்குக் காளியம்மாள் எனும் மனைவி இருக்கிறார். மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த தம்பதிகள் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அது தொடர்பாக ஜோதிடரை சந்தித்து ஆலோசனைக் கேட்க தென்காசியில் உள்ள ஒரு ஜோதிடரை சந்தித்துள்ளார் மாரியப்பன்.

அப்போது  அந்த ஜோதிடர் மாரியப்பனிடம் ‘உன் மனைவியின் நடத்தை தவறாக உள்ளது’ எனக் கூறியுள்ளார். ஜோதிடரின் வார்த்தையை நம்பிய மாரியப்பன், கோபத்தோடு ஊருக்கு சென்றுள்ளார். தங்களது பருத்தி காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கோபத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்து தானும் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோதிடரின் ஒரு வார்த்தையை நம்பி கணவன் மனைவி இருவரின் உயிரையும் காவு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments