Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திகில்’ படம் பார்த்த ரசிகர் அதிர்ச்சியில் தியேட்டரிலேயே மரணம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (13:07 IST)
தியேட்டரில் ’திகில்’ படம் பார்த்த ரசிகர் அதிர்ச்சியில் தியேட்டரிலேயே மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
திருவண்ணாமலை நகரின் செங்கம் சாலையில் தியேட்டர் ஒன்றில் சமீபத்தில் வெளிவந்த காஞ்ஜரிங்-2 என்ற ஆங்கில பேய் படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படம் நேற்று மாலை 6.30 மணி காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
 
இதனை கண்டு களிக்க ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராம்மோகன் (68) என்பவர் வந்துள்ளார். படத்தில் பேய்களும், பிணங்களும் அதிகம் காட்டப்படும் இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில், உச்சகட்ட காட்சியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராம்மோகன் பயத்தில் அலறி கத்தியுள்ளார். மேலும்,நெஞ்சுவலி ஏற்பட்டு, வலியால் துடித்துள்ளார். இதனால், அவருக்கு அருகே இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
பின்னர், அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments