Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி குடும்பத்தினர் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட திமுக கட்சி பொறுப்பாளர்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:14 IST)
சென்னையைச் சேர்ந்த சவுண்ட் சர்வீஸ் நடத்திவரும் அந்த நபருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் வித்யாகுமார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் நிஷா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது.இதையடுத்து சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக வித்யாகுமாரின் தாயார் நிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதே போல நிஷாவும் தன் கணவர் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக விசாரிக்க போலிஸார் வித்யாகுமாரை அழைத்துள்ளனர். அவர் வெளியே இருப்பதாக சொல்லியுள்ளார். இதனால் அவரின் பெற்றோரை ஸ்டேஷனுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வித்யாகுமார் தன்னுடைய குடோனில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலை சம்மந்தமாக செல்போனில் பேசி வீடியோ ஆதாரம் வெளியிட்ட பின்னரே தற்கொலை செய்துகொண்டார். மரணமடைந்த வித்யாகுமார் திமுகவில் வார்டு அளவில் பொறுப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் உட்கட்சி பூசல்.. மகளிரணி நிர்வாகி பரபரப்பு வீடியோ!? - என்ன செய்யப் போகிறார் விஜய்?

இறங்கிய வேகத்தில் வேகமாக உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்வு..!

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. பதிவு செய்வது எப்படி?

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்! பக்தர்கள் செல்ல தடை! பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments