Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனிதன் கையால் மலம் அள்ளும் அவலம்; விழிப்புணர்வை ஏற்படுத்திய “மஞ்சள்” நாடக நிகழ்வு!

Advertiesment
மனிதன் கையால் மலம் அள்ளும் அவலம்; விழிப்புணர்வை ஏற்படுத்திய “மஞ்சள்” நாடக நிகழ்வு!
, சனி, 1 ஜூலை 2017 (17:12 IST)
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில்  “மஞ்சள்” நாடகம் நடத்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்”  என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது  என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்தது.

 
‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில்  இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். 
 
கனிமொழி,  தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சு.திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், கு.ஜக்கையன்,  சதானந்த் மேனன், மதிவண்ணன், சத்யராஜ், கலையரசன், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, மீரா  கதிரவன், சுசீந்திரன் உள்பட இன்னும் பெயர் குறிப்பிடாத பல்துறை பிரபலங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்ள  அரங்கம் நிரம்பி வழிந்தது.

webdunia
 
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘மனுசனே மனுச மலம் அள்ளுற வேலைய நிறுத்தறதுக்கு ஒரு சிம்பிள் வழி இருக்கு. வாரம்  ஒவ்வொரு சாதிக்காரன் மலம் அள்ளணும்னு சொல்லிப் பாருங்க. உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க’ என்ற பகடியாக பேசினாலும் உண்மை நிலையை சொன்னார்.
 
60 நாடக கலைஞர்கள் தெளிவான ரிகர்சலுக்குப் பின் அரங்கேற்றிய, “மஞ்சள்” நாடகத்தை எழுதியர், ஜெயராணி. இயக்கியவர் ஸ்ரீஜித் சுந்தரம், மேற்பார்வை செய்தவர்கள் பாரதி செல்வா மற்றும் சரவணன்.

webdunia
 
நாடகத்திற்கு பின் நிகழ்ந்த கருத்துரையில், திருமாவளவன், ஜக்கையன் பேசிய போது இது யாருக்கான நாடகம், யாருக்கு  செல்லவேண்டும் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள். மேலும் திருமாவளவன் கூறுகையில், காந்தியம் சாதியை ஒழிக்க உதவாது, அம்பேத்கரியம் தான் அதைச்செய்ய முடியும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பாலாஜி மீது கமிஷனர் அலுவலகத்தில் மனைவி புகார்...