Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சலுக்குள் இருந்து பாய்ந்த பாம்பு! அறண்டு போன அதிகாரிகள்!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (13:37 IST)
மலேசியாவிலிருந்து பாம்பு முதலிட்ட கொடிய விஷமுள்ள உயிரினங்களை கடத்தி வந்த நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த இரண்டு நபர்கள் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கண்ட சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்த பார்சலில் என்ன இருக்கிறது என்று விசாரித்தபோது, அதில் சாக்லேட் மற்றும் விளையாட்டு பொருட்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

பார்சலை சோதித்து பார்த்துவிட முடிவு செய்த அதிகாரிகள் பார்சலை திறந்திருக்கிறார்கள். சடாரென உள்ளிருந்து இரண்டு பாம்புகள் வெளிய பாய்ந்து தரையில் விழுந்து ஓடியிருக்கின்றன. அவற்றை விமான நிலைய ஊழியர்கள் சிலர் குச்சிகளை பயன்படுத்தி பிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து சோதனை செய்ததில் கொடிய விஷமுடைய பாம்புகள், மரப்பல்லிகள், உடும்புகள் போன்ற ஜந்துக்கள் இருந்துள்ளன.

இதுகுறித்து விசாரித்தபோது இவற்றை மலேசியாவில் உள்ள ஒருவர் கொடுத்ததாகவும் இவற்றை சென்னையில் ஒருவரிடம் கொடுத்தால் பணம் கொடுப்பதாக கூறியதாகவும் சிக்கியவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதை கடத்த முயற்சித்தது யார்? என்ன நோக்கத்திற்காக? என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடிய ஜந்துகள் மீண்டும் மலேசியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments