Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி 11ல் ம.நீ.ம பொதுக்குழு: கூட்டணி குறித்து முடிவா?

Advertiesment
பிப்ரவரி 11ல் ம.நீ.ம பொதுக்குழு: கூட்டணி குறித்து முடிவா?
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:13 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக வழக்கமாக நடக்கும் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தும் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் கட்சி முடித்துவிட்டதாகவும் அக்கட்சிக்கு 25 தொகுதிகள் தர திமுக ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தியை உலவி வருகிறது
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர மக்கள் நீதி மய்யம் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வரும் 11ம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல்ஹாசன் எடுப்பார் என்றும் அதன் பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி ஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் – சேலம் மாணவர் சாதனை!