Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மய்யம் ஆதரவு! – புறப்பட்டது 10 பேர் கொண்ட குழு!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:58 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு 10 நாட்களும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் வரும் டிசம்பர் 9ல் பந்த் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் உத்தரவின்படி மக்கள் நீதி மய்யம் விவசாய அணி செயலாளர் மயில்சாமி, தமிழக விவசாய சங்க தலைவர் செல்லமுத்து மற்றும் மகளிர் அணி செயலாளர் மூகாம்பிகா ஆகியோருடன் 10 பேர் கொண்ட குழு டெல்லிக்கு சென்று மக்கள் நீதி மய்யம் சார்பாக போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments