Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

Advertiesment
GST

Siva

, ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (14:29 IST)
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் இன்று ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. திருமங்கலம் அருகே உள்ள இந்த அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள உணவகத்தில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவத்தின்போது, ஜன்னல்கள் வழியாக கடும் கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த தீவிபத்தின் காரணமாக, அலுவலகத்தில் இருந்த தளவாட பொருள்கள், மின்னணு உபகரணங்கள், மற்றும் முக்கிய அலுவல் ஆவணங்கள் பலவும் எரிந்து நாசமாகின. சேதத்தின் அளவு மற்றும் தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தற்போது தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!