Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

Siva
புதன், 5 மார்ச் 2025 (18:46 IST)
பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12:30 முதல் 2 மணி வரை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு  செல்லும் நான்கு ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு - கடற்கரை இடையே செல்லும் ஐந்து ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை பயணிகள் கருத்தில் கொண்டு, தங்களுடைய பயணத்தை மாற்றி அமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments