Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் மதிப்பு திடீர் உயர்வு.. உள்ளூர் முதலீடுகள் அதிகரித்ததா?

Siva
புதன், 5 மார்ச் 2025 (18:41 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு இன்று ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், இன்றைய வர்த்தக முடிவின்போது அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87 ஆக நிறைவு பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்றைய வணிக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.87.19 ஆக இருந்த நிலையில், இன்று அது 19 காசுகள் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிதி படிப்படியாக வெளியேறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டதால் பங்குச்சந்தை மிக மோசமாகச் செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினாலும், உள்ளூர் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3405 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ.4,851 கோடி முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments