Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெவி டிராபிக்: ஸ்தம்பித்தது சென்னையின் முக்கிய சாலைகள்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (11:16 IST)
திமுக பேரணியால் எழும்பூர் காந்தி இர்வின் சாலை, எழும்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சென்ட்ரல் அருகில் போக்குவரத்து நெரிசல்.

 
சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தத்தை அமல்படுத்திய மத்திய அர்சு. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு எதிராக திமுக கூட்டணி பேரணியை நடத்தி வருகிறது. 
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பேரணியில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா,  எல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்,  உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 
 
இந்த பேரணிக்கு சுமார் 5000 போலீஸார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது. ”மதச்சார்பற்ற இந்தியாவை இந்து தேசமாக மாற்றாதே! குடியுரிமை சட்டம் குழிபறிக்கும் சட்டம்!” ஆகிய முழக்கங்களுடன் நடைபெறும் திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் பேரணியால்  எழும்பூர் ஆதித்தனார் சாலையில் போக்குவரத்து முழுவதுமாய் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், எழும்பூர் காந்தி இர்வின் சாலை, எழும்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சென்ட்ரல் அருகில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments