Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு!

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:29 IST)
பங்களாதேஷ்  நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதும் எப்பொழுதெல்லாம் பங்களாதேஷத்தில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கம் உறவுகளுக்கு  சவால் வருகிறது.
 
அதனை  எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவு மிகவும் முக்கியமானவை இது மேலும் வலுப்பெறும் என்ற  நம்பிக்கை இருக்கிறது ஜவுளி துறை தொடர்பான கேள்விக்கு தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது இந்த தொழில் வெற்றி பெறுவதற்கு உதவுவதாக அமையாது ஜவுளி த்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால் தான் இந்த தொழில் காலத்தை கடந்து நிற்கும் உலகம் முழுவதும் ஜவுளி தொழில் வளர்ந்து வருகிறது பங்களாதேஷில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளி தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது பர்மாவில் கூட  ஜவுளி புதிய எழுச்சியை ஏற்பட்டுள்ளது நம்முடைய பகுதியை விட்டு ஜவுளி தொழில் வேறு நாட்டிற்கு வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால் மாநில அரசு ஜவுளி துறை சேர்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு  உரிய உதவிகளை செய்ய வேண்டும்.
 
போதை பொருள் ஒழிப்பு முதல்வர் பற்றிய கேள்விக்கு போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று கஞ்சா அதிகமாக பிடிபட்டது என்று சொன்னால் கஞ்சா நடமாட்டம் அதிகமாகிறது என்று பொருள் அதனை கட்டுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கையை பார்க்க வேண்டும் முதல்வர் அவர்கள் கஞ்சாவை இதர போதை வஸ்துகளை எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன் அனைவரும் வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.
 
பொன் மாணிக்கவேல் வழக்கு பற்றிய கேள்விக்கு  சிலை  வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை எந்த அளவுக்கு  முடிவு பெற்றுள்ளது அதன் பிறகு  பொருத்திருந்து பார்ப்போம் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments