Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெச்ச கோரிக்கை இறைவனுக்கு கேட்டுச்சோ.. இண்டிகோவுக்கு கேட்டுடுச்சு! மதுரை – திருப்பதி விமான சேவை!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (12:59 IST)
முதன்முறையாக மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் தரிசனத்திற்காக செல்கிறார்கள். தமிழகத்திலிருந்தும் அதிகமான மக்கள் ஆண்டுதோறும் திருப்பதி கோவில் செல்கிறார்கள். இந்நிலையில் தென் தமிழக மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பலர் திருப்பதி செல்ல ரயில்களை நம்பியுள்ள நிலையில் ரயிலில் பயணித்தால் கிட்டத்தட்ட ஒன்று முதல் ஒன்றரை நாள் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை ஏற்றுள்ள இண்டிகோ நிறுவனம் முதன்முறையாக மதுரை – திருப்பதி விமான சேவையை தொடங்குகிறது.

மதுரை விமான நிலையத்திலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.20க்கு திருப்பதியை சென்றைடையும், அதேபோல், மாலை 4.40க்கு திருப்பதியிலிருந்து புறப்படும் விமானம் மாலை 6.40க்கு மதுரையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments