Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவு செய்யுங்கள் தலைவா, முடிவு சொல்லுங்கள்: ரஜினி ரசிகர்களின் போஸ்டர் வைரல்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:24 IST)
முடிவு செய்யுங்கள் தலைவா, முடிவு சொல்லுங்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை என்பதும் குறிப்பாக சமீபத்தில் அவர் பதிவு செய்த டுவிட்டால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
ஆனால் ஒரு தரப்பினரோ அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிக்கொண்டு எதிரிகளை நம்பவைத்து திடீரென பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வருவார் என்றும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
வார்த்தையா? வாக்கா?
முடிவு செய்யுங்கள் தலைவா
முடிவு சொல்லுங்கள் தலைவா
 
என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்  மதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மதுரையைத் தாண்டி ஒரு சில நகரங்களிலும் ஒட்டப்பட்டு வருகிறது 
 
ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினி அரசியலுக்கு வருவாரா? அல்லது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதை தவிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments