பகைக்கு வயது ஒன்று … பலிக்குப் பலி தொடரும் – மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர் !

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (08:45 IST)
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் அனுப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் நடந்த ஒரு தகராறில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமான குற்றவாளிகள் சிறையில் உள்ளனர்.

இது நடந்து ஒரு ஆண்டு முடிந்துள்ள நிலையில் இவரது நண்பர்கள் இப்போது ஒட்டியுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் ‘சிந்திய ரத்தம் வீண்போகாது. எதிரியை வீழ்த்துவது உறுதி. பகைக்கு வயது ஒன்று. பலிக்குப் பலி தொடரும்’ என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பகையை வளர்க்கும் பொருட்டு அவர்கள் நடந்து கொண்டுள்ளதாக போலிஸாருக்கு செய்தி வந்துள்ளது.

இதையறிந்து தலைமறைவான கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் சில்க் உற்பத்தியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் சித்தராமைய்யா தலையிட கோரிக்கை..!

2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற திமுக நிர்வாகி கைது! கிருஷ்ணகிரியில் பயங்கரம்:

மத்திய கிழக்கு போர் பதற்றம்: 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பி.வி. சிந்து..!

துபாய் மீது ஈரான் அதிரடி தாக்குதல்: உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் சேதம்!

ஒரே நாள் தான் போர்.. உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மரணம்: போரை தொடருமா ஈரான்?

அடுத்த கட்டுரையில்
Show comments