Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை நத்தம் மேம்பாலம் திறப்பை முன்னிட்டு சோதனை ஓட்டம்!

மதுரை நத்தம் மேம்பாலம் திறப்பை முன்னிட்டு சோதனை ஓட்டம்!
, புதன், 5 ஏப்ரல் 2023 (13:41 IST)
தமிழகத்தின் நீளமான 7.5 கி.மீ. தொலைவுக்கு கட்டி முடிக்கப்பட்ட மதுரை - நத்தம் பறக்கும் சோதனை ஓட்டம் தொடக்கம். வரும் எட்டாம் தேதி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இப்பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
 
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018 ஆண்டு தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம்  வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. 
 
இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268  தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்கள் இடைய பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் ‘கான்கிரீட் கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.
 
மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதே போல் இப்ப பாலத்தின் வழியாக சென்னை செல்வோர் ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் வருகிற எட்டாம் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இபாதத்தை திறந்து வைக்கிறார் இதனை முன்னிட்டு இன்று பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது மக்கள் ஆர்வமாக பாலத்தை கடந்து செல்கிறார்கள் தமிழகத்திலேயே மிக நீண்டமான பாலமாக இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் தொடக்கம்.. கலாஷேத்ரா கல்லூரி நிலவரம்..!