Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை முத்து திடீர் இரண்டாம் திருமணம்? : வைரலாகும் புகைப்படம்

மதுரை முத்து திடீர் இரண்டாம் திருமணம்

மதுரை முத்து திடீர் இரண்டாம் திருமணம்? : வைரலாகும் புகைப்படம்
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (13:52 IST)
தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவலும், ஒரு புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சன் டிவி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி பலியானார். 
 
32 வயதான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சிவகங்கையில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது, திருப்பத்தூர் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானர். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்த துயர சம்பவத்திலிருந்து மீளாத முத்து, அவ்வப்போது தனது மனைவி பற்றிய நினைவுகளை, தனது பேஸ்புக் பக்கத்தில், உருக்கமான பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் திடீரென இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது. அவர் ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
 
ஆனால், அந்த காட்சி ஒரு குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட ஒன்று.. அதில் உண்மையில்லை என்று மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்