Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலை நயத்தை இழக்கிறது நாயக்கர் மஹால்: மதுரை மக்கள் சோகம்

கலை நயத்தை இழக்கிறது நாயக்கர் மஹால்: மதுரை மக்கள் சோகம்
, செவ்வாய், 23 மே 2017 (07:34 IST)
மதுரையின் அடையாளங்களில் ஒன்று திருமலை நாயக்கர் மஹால். அதில் உள்ள பெரிய பெரிய தூண்கள் காண்போரை ஆச்சரியப்படுத்தும். 'இருவர்' உள்பட பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. இந்த மஹாலில் உள்ள கலைநயம் தான் சுற்றுலாப்பயணிகளுக்கு சரியான தீனி



 




இந்த நிலையில் திருமலை நாயக்கர் மஹாலை வணிக வளாகமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தொல்லியல்துறை, திருமலை நாயக்கர் மகால் போன்ற பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிப்பு வேலைகளைக் கூட செய்யாமல், அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. ஆனால் தொல்லியல் துறையின் விதிகளை மீறி  உள்ளூர் ஆளும் கட்சியினரின் ஆதிக்கத்தால் அங்கு விரைவில் வணிக வளாகம் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது.

அரண்மனையின் பிரம்மாண்ட நுழைவு வாயில் முன், தற்போது ஜூஸ், பழக்கடை, ஊசி, பாசி கடை, இளநீர் கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சில தள்ளுவண்டி கடைகளும் ஆங்காங்கே நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இந்த கடைகள் செயல்படுவதற்கு தொல்லியல் துறையும், மாநகராட்சியும் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. ஆனால், யார் அனுமதியின் பேரில் இந்த கடைகள் செயல்படுகிறது என் பது தெரியவில்லை. இதனால் மஹால் கலை நயத்தை இழந்து வருவதாக மதுரை மக்கள் சோகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்ல உங்க சிஸ்டத்தை சரிசெய்யுங்க ரஜினி. தீபா