மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் மல்லிகை பூ விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
மதுரை மல்லி என்பது தமிழகம் முழுவதும் பிரபலமானது என்பதும் வாசனையுள்ள இந்த மல்லியையைதான் அனைவரும் விரும்பி வாங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
வெயில் காலத்தில் அதிகம் வரத்து இருப்பதால் மல்லிகை பூ விலை குறைவாக இருந்தாலும் பனிக்காலத்தில் வரத்து குறைவாக வருவதால் விலை அதிகமாக இருக்கும்
அந்த வகையில் கடந்த சில நாட்களாக அதிகமாக பனி அடித்து வரும் நிலையில் மல்லிகை வரத்து குறைந்தது. இதன் காரணமாக மதுரை மல்லி இப்போது ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை சந்தையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.