Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா? இலங்கைக்கு மதுரை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Advertiesment
மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா? இலங்கைக்கு மதுரை உயர்நீதிமன்றம் கண்டனம்!
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (12:55 IST)

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கிருமி நாசினி தெளித்ததற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது கிருமிநாசினி அளிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை ஹைகோர்ட் மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது மனிதாபிமானம் இல்லாத செயல் என்றும் மீனவர்களை தனிமைப்படுத்தி அதன்பின்னர் கொரோனா பரிசோதனை செய்து இருக்கலாம் என்றும் கைது செய்ய மீனவர்களை கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடன் இலங்கை அரசு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழக மீனவர்களை மத்திய அரசு  விரைவில் அழைத்து வரும் என்றும் இந்த நீதிமன்றம் நம்புகிறது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை சுற்றிதான் என் எண்ணங்கள் உள்ளது! – ராகுல்காந்தி ட்வீட்!