ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் தென் மாவட்டத்தில் நடைபெறும் மிக முக்கிய மாநாடு தான் மதுரை மாநாடு. இந்த நிலையில் இந்த மாநாடு நடைபெறும் அதே தேதியில் தான் திமுக உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மதுரை அதிமுக மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் விமான நிலையத்திற்கு அருகில் இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்ப மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது என்றும் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு அதை பரிசீலனை செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.