Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி வழக்கு; திரும்ப பெறாவிட்டால் அபராதம்! – நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (13:45 IST)
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்த தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கு தொடுத்தவர்களிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் சிலை வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் மீதான விசாரணையின் போது நாள்தோறும் 6000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி அளிக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் தமிழக அரசு விதித்த தடை சரியானதே என கூறியுள்ள நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி நடத்த உத்தரவிட கோரிய மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments