தஞ்சாவூரில் ஆஞ்சநேயர் கோயில் முன்பு மது அருந்தியதை தட்டிக்கேட்ட பெண் காவலரிடம், உள்ளாடைகளை கழற்றிக் காட்டி தகராறு செய்த வழக்கில் கைதான இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரனின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மீண்டும் தள்ளுபடி செய்தது
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டது என்று தெரிவித்தார்.
முன்னதாக தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் கடந்த மாதம் 7-ம் தேதி இரவு பெண் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோஒது, ரயில்வே காவல் துறையினர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு 3 பேர் அமர்ந்து மது அருந்தியதை கண்டித்தனர்.
கோயில் முன்பு ஏன் மது அறுந்துகிறீர்கள்? என பெண் காவலர் கேட்டதற்கு அவர்கள் தங்கள் உள்ளாடைகளை கழட்டி, போலீசிடம் தகாத முறையில் நடந்ததாகவும், இதுகுறித்து பெண் காவலர் கொடுத்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.