பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் குடிதண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரும் அதிகளவில் கிடைக்காத நிலையில் வெயில் காலமும் நெருங்கி விட்டதால் மதுரையின் பெரும்பாலான பகுதிகள் தனியார் குடிநீர் வாகனங்களின் தண்ணீர் சப்ளையை நம்பியே உள்ளன.
இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மதுரை தனியார் குடிநீர் சப்ளை வாகனங்கள் குடிநீர் விலையை குடத்தின் அளவுக்கு ஏற்ப உயர்த்தியுள்ளன. அதன்படி பெரிய குடத்தில் தண்ணீர் ரூ.13, சிறிய குடம் ரூ.8 மற்றும் கைக்குடம் ரூ.4 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடிதண்ணீர் விலையேற்றம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.