Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு; ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு; ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!
, வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:02 IST)
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்துக்குள்ளான நபருக்கு இழப்பீடு வழங்காததால் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல் கடந்த 2003ம் ஆண்டு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ரயில் டிராக்டரில் மோதிய விபத்தில் பழனிவேல் 50 சதவீதம் ஊனமடைந்தார். இதற்கு இழப்பீடு கோரி அவர் வழக்கு தொடர்ந்த நிலையில் தவறுதலாக ரயில் பாதையில் வந்த டிராக்டரின் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தொடரப்பட்ட மேல்முறையீட்டில் கூலி தொழிலாளிக்கு ரயில்வே நிர்வாகம்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு வெளியாகியது. அந்த சமயம் 60% இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய ரயில்வே நிர்வாகம் மீத தொகையை தராமல் இழுத்தடிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணையில் மீத இழப்பு தொகையை உடனே கூலி தொழிலாளிக்கு வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்காமல் இழுத்தடித்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்யவும் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து 4 பேர் காயம்!