இந்த முறையும் மதுரை சித்திரை திருவிழா தடை!? – ஆன்லைனில்தான் தரிசனமா? பக்தர்கள் வேதனை!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (14:33 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவை நேரில் காண முடியாதா என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.’

மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் அழகர் திருவிழா தமிழகம் முழுவதும் பிரபலமான ஒன்று. ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வாடிக்கை. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் அழகர் திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக சித்திரை திருவிழா ஆன்லைனில் லைவாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அழகர் திருவிழாவை நேரில் காண மக்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் திருவிழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா பகதர்கள் அனுமதிக்கப்படாமல் நேரடி ஒளிபரப்பு மட்டுமே செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அமெரிக்க மாகாண ஆளுனர், அட்டர்னி ஜெனரல் தேர்தல்.. டிரம்ப் கட்சி படுதோல்வி..!

Gen Z எனப்படும் இளைஞர்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பார்கள்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

மகாத்மா காந்தியின் 3 குரங்குகள்.. ராகுல், அகிலேஷ், தேஜஸ்வியை விமர்சித்த யோகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments