Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுர இலவம்பஞ்சு பொங்கல்.. கலாய் மெட்டீரியலான பாஜக பொங்கல் விழா!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (13:18 IST)
மதுரையில் குஷ்பூ பங்குபெற்ற பொங்கல் விழாவில் அனைத்து பானைகளிலும் பொங்கலுக்கு பதிலாக பஞ்சை வைத்து அலங்காரத்திற்கு மட்டும் வைத்ததாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா வரும் வாரத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் முன்னதாக கட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை குஷ்பூ கலந்து கொண்டார். பல பெண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு மஞ்சள் அரைப்பது, பொங்கல் கிண்டுவது போன்ற காட்சிகள் வெளியாகின.

இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரே ஒரு பானையில் மட்டுமே அரிசி, வெல்லம் போட்டு பொங்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற பானைகள் எல்லாம் பஞ்சு நிறைக்கப்பட்டு பொங்கல் நிரம்பி வழிவது போல செட் செய்யப்பட்டுள்ளதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இது பல்வேறு வாக்குவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments