Publish Date: Thu, 22 Jun 2023 (12:06 IST)
Updated Date: Thu, 22 Jun 2023 (12:07 IST)
பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அதை நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என மதுரை பாஜக சவால் விட்டுள்ளது.
பிரதமராக மோடி பதவியேற்று ஒன்பது ஆண்டு காலம் ஆகிய நிலையில் இதுவரை அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று கூறப்படுகிறது.
பிரதமர் மீதும் பாஜக மீதும் மதவாதம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே எதிர்க்கட்சிகளால் கூறப்படுகிறது என்றும் ஊழல் குற்றச்சாட்டு என்பது இல்லை என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் எதிர்க்கட்சிகளால் ஊழல் குற்றச்சாட்டு எதையும் கூற முடியாமல் திணறி வருகின்றன என்று மதுரை பாஜகவினர் தெரிவித்துள்ளனர். பாஜக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து, அதை நிரூபித்து காட்டினால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்க இருப்பதாகவும் மதுரை பாஜகவினர் சவால் விட்டனர்