மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அதன்படி சற்றுமுன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தன.
இதனை அடுத்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார். இது குறித்து மத்திய அமைச்சர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டங்ஸ்டன் ரத்து செய்யப்படும் அறிவிப்பு நாளை வெளியாகும் என அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்த நிலையில் சற்றுமுன் இந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து மதுரை மக்கள் பட்டாசு வெடித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.