Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் செய்த மாணவர்களை அப்புறப்படுத்திய போலீசார்: சென்னை பல்கலையில் பரபரப்பு

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (08:21 IST)
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்து கடந்த 2 நாட்களாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் செய்த மாணவர்களை இன்று அதிகாலை போலீசார்  அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதோடு மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு, அழைத்து சென்ற போலீசார் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
 
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், உடனடியாக விடுதிகளை காலி செய்யுமாறு, மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் வற்புறுத்தி வருவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments