குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்று இரவு முழுவது போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.
பின்பு இரவில் பல்கலைகழகத்திற்குள் புகுந்த போலீஸார் மாணவர்களை தாக்கினர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், டெல்லி மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து டிசம்பர் 23 வரை பல்கலைகழகம் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.