Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர்கள் மாணவிகளை வீட்டிற்கு அழைக்கக்கூடாது – சென்னை பல்கலைகழகம் அதிரடி

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:08 IST)
கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறலை தடுக்கவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும் புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது சென்னை பல்கலைகழகம்.

சென்னை பல்கலைகழகம் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்கலைகழகத்தில் மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைகழகத்தின் அனுமதியின்றி பேராசிரியர்களுடன் மாணவிகள் சுற்றுலா செல்ல கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதுபோல பேராசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவிகளை வீட்டிற்கு அழைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்களோடு வெளியே செல்லுதல், அவர்கள் வீட்டில் தங்குதல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை பேராசிரியர்களோடு வெளியே செல்ல வேண்டிய அவசியம் எழும் பட்சத்தில் பல்கலைகழகத்தில் முன்னரே அனுமதி வாங்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களிலும் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்