கபாலி படத்திற்கு வெளி நாடுகளில் ஏ சான்றிதழ் வங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி யூ சான்றிதழ் வழங்கப்பட்டது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்த கபாலி படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். இந்த படத்திற்கு தமிழக தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் சவாரி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரண் கூறியபோது, கபாலி படத்திற்கு வெளிநாடுகளில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தணிக்கை குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.