ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தொகுதியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுவாக இடைத்தேர்தல் என்றால் அது ஆளும் கட்சிக்கு தான் சாதகமாக அமையும்.
ஆனால் இந்த முறை ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளனர். இவர்கள் அல்லாமல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளார். சசிகலா அணி மீது பொதுமக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ் அணி பெரும்பான்மை இல்லாமல் உள்ளனர். இருந்தாலும் ஓபிஎஸ் அணி மக்களுக்கு பிடித்த அணி, அதோடு அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ள அணியாக திகழ்கிறது.
தீபா முதல்முறையாக களமிறங்கியுள்ளார். அத்தை தொகுதியில் வெற்றிப் பெறுவேன் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த பிரிவினைகளால், எதிர்க்கட்சியான திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. அவர்களும் மருது கணேஷ் என்பவரை வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளனர். சசிகலா அணியில் தினகரன் வேட்பாளராக களமிறகியுள்ளார். ஓபிஎஸ் அணியில் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.